எனது வலைப்பதிவு பட்டியல்

எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 21 ஜூலை, 2014

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

                                             

                                                  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்                  




ஸ்ரீ சாயி விரத கதை (Sri Sai Vratha Kathai)

                          இதை படித்து சாயியின் பக்தர்கள் பலனடையட்டும். 





கோகிலா என்னும் பெண்மணியும் அவர் கணவர் மஹேஷும் குஜராத்தில் ஒரு ஊரில் வசித்து வந்தனர். இருவரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர். ஆனால் மஹேஷ் அவர்களோ சுபாவத்தில் சண்டைகாரராக இருந்தார்.வரை முறையற்ற பேச்சு சிடுமூஞ்சித்தனம் நிறைந்தவராக இருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது சுபாவத்தினால் தொல்லை அடைந்தனர். ஆனால் கோகிலா அம்மாளோ மிகுந்த ஒழுக்க நெறியுள்ள பெண்மணியாக இருந்தார். இறைவன் மேல் தீரா நம்பிக்கை கொண்டு அனைத்தையும் சகித்துக் கொண்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் வியாபாரம் நஷ்டமடைய ஆரம்பித்து நாளடைவில் ஒரேயடியாக வருமானமும் நின்று போய் விட்டது. மஹேஷ் வீட்டிலேயே இருக்கத் துவங்கினார். அதனால் இன்னும் அவர் சுபாவம் மோசமடைய ஆரம்பித்தது. முன்பை விட அதிக சிடுமூஞ்சி ஆனார்.

ஒரு மதிய நேரம் ஒரு முதிய சாது அவர் வீட்டுக் கதவருகில் நின்றார். முகத்தில் அபூர்வமான ஒளியும்,தேஜசும் நிறைந்து இருந்தது. அவர் கோகிலாவிடம் சாதம்,பருப்பு அளிக்கும்படிக் கேட்டார். கோகிலாவும் சாதம்,பருப்பு அளித்து இரு கை கூப்பி நமஸ்காரம் செய்தார். ”சாதுவும் சாயி உங்களை சுகமாக வைப்பார்” என்று ஆசிர்வதித்தார். கோகிலா அம்மாளூம், “ஐயனே! சுகம்,சாந்தி எங்கள் விதியிலேயே இல்லை போன்று இருக்கிறது.” என்று வருத்தமாகக் கூறித் தன் துன்பம் நிறைந்த கதையைக் கூறினார்.

சாதுவும் சாயிபாபாவின் விரதத்தை பற்றிக் கூறினார். ஒன்பது வியாழக்கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் அல்லது ஒரு வேளை உணவு உட்கொண்டு முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரதம் ஒன்பது வாரம் செய்து விதி முறைப்படி நிறைவு செய்யவும் . ஏழைகளுக்கு உணவு அளித்து சாயி விரத புத்தகங்களை தன்னால் இயன்ற அளவு 5,11,21 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கவும். இப்படி சாயி விரதத்தின் மஹிமையைப் பரப்பினால் சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவார். இந்த விரதம் கலியுகத்திற்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம். இந்த விரதம் கண்டிப்பாக மிகுந்த பலன்கள் அளிக்க வல்லது ஆனால் விரதமிருப்போர் சாயிபாபாவின் மேல் மிகுந்த பக்தியும்,நம்பிக்கையும் வைத்தல் அவசியம். யார் மேற்கூறியபடி விரதமும் நிறைவும் செய்கிறார்கேளா, சாயிபாபா அவர்களுடைய விருப்பங்களை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று ஆசிர்வதித்து விட்டுச் சென்றார்.

கோகிலா அம்மாளும் ஒன்பது வியாழக்கிழமைகள் விரதம் இருந்து ஒன்பதாவது வியாழனன்று ஏழைகளூக்கு உணவு அளித்தார். சாயி விரத புத்தகங்களை விநியோகித்தார்.அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவு பெயரளவுக்குக் கூட இல்லாமல் போய் விட்டது. வீட்டில் பெரும் சுகம் ஆனந்தம் நிலவியது. அதேசமயம் மஹேஷின் சுபாவமும் மாறி அவருடைய வியாபாரமும் சூடு பிடித்தது. சிறிது நாட்களிலேயே ஆனந்தமும் செல்வமும் பெருகியது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாய் வாழலாயினர்.

ஒரு நாள் கோகிலா அம்மாளின் மைத்துனரும், மைத்துனர் மனைவியும் சூரத்திலிருந்து வந்தனர். பேச்சோடு பேச்சாக தங்கள் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பரீட்சையில் ஃபெயில் ஆகி விட்டனர் என்றும் வருத்தப்பட்டனர். கோகிலா ஒன்பது வியாழக்கிழமைகள் விரதத்தின் மஹிமை பற்றிக் கூறினார். சாயி பக்தியினால் குழந்தைகள் நன்கு படிக்கத் துவங்குவர். ஆனால் சாயிபாபாவின் மேல் அதீத விஸ்வாசமும், நம்பிக்கையும் வைத்தல் அவசியம். சாயி அனைவருக்கும் அருள் புரிவார் என்று கூறினார்.


அவர் மனைவி விரத முறைகளைக் கேட்டார். கோகிலா கூறலானார்.” ஒன்பது வியாழக் கிழமைகள் பழ திரவிய ஆகாரங்கள் உட்கொண்டு முடியாதவர்கள் ஒரு வேலை உணவு அருந்தி இந்த விரதம் செய்ய வேண்டும் ,முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்கு ஒன்பது வியாழனும் செல்லவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாயிபாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். மேலும் இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு பூஜை செய்யவும். மஞ்சள் நிறமலர்கள் மாலை அணிவித்து ,தீபம்,ஊதுபத்தி ஏற்றி ,பிரசாதம் நிவேதனம் செய்து,விநியோகம் செய்து சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும். சாயி விரத கதை, சாயி ஸ்மரணை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.

ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்
ஒன்பதாவது வியாழக் கிழமை இந்த சாயி விரத புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கவும்( 5 அல்லது ௧௧ அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
சூரத்திலிருந்து அவர் மைத்துனர் மனைவியின் கடிதம் சிறிது நாட்களிலேயே வந்தது. அதில் அவர் குழந்தைகள் சாயி விரதம் இருப்பதாகவும் மிக நன்றாக படிக்கத் துவங்கி விட்டனர் என்றும் எழுதி இருந்தார். மேலும் அவரும் இந்த விரதம் இருந்ததாகவும் ,விரத புத்தகங்களைஆபிசில் விநியோகம் செய்ததாகவும் எழுதி இருந்தார். அதை பற்றி அவர் எழுதுகையில் அவர் தோழி சாருவின் மகளுக்கு சாயி விரத பலனாக மிக நல்ல இடத்தில் வரன் அமைந்து நல்ல விதமாக திருமணம் நடந்தது. அவர் பக்கத்து வீட்டில் வசிப்பவரின் நகைப்பெட்டி தொலைந்து போய் இருந்தது. அவரும் சாயி விரதம் இருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நகைப்பெட்டி திரும்பக் கிடைத்து விட்டது. (யார் திரும்ப கொண்டு வைத்தார் என்று தெரியாது) இப்படி பல அற்புதங்கள் நடந்தன.
கோகிலா அம்மையாரும் சாயி விரத மஹிமையை நன்கு புரிந்து கொண்டார்.
ஓ !சாயி! இப்படி எல்லோர் மேலும் பொழியும் ¸உன் அன்பை என் மேலும் பொழிவீராக!

சாய்பாபா வியாழக்கிழமை விரதம்


                             சாய்பாபா வியாழக்கிழமை விரதம்
ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வரவும்.
* இந்த விரதம் ஆண், பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாய்பாபா படத்திற்கு பூஜை செய்யவும்.
* மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் அர்ப்பணம் செய்து, மக்களுக்கு வழங்கி சாய்பாபாவை தியானம் செய்யவும்.
* சாய் விரத கதை, சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.
* ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.
* ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த பாபா தொடர்பான புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் பலருக்கு வழங்கவும்.

சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு


                                           சீரடி சாய்பாபா வாழ்க்கை வரலாறு




இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் உள்ள சீரடி எனும் அந்த கிராமத்தில் ஒரு மிகப்பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயது குழந்தை தியானம் செய்து கொண்டிருந்தது.
அந்த குழந்தையின் முகத்தில் அருள் ஒளி வட்டம் வீசுவதை கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவியார் பாஜ்யாபாய் அந்த குழந்தையைக் கண்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அக்குழந்தை அவருடன் செல்ல மறுத்து தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டது. அந்த குழந்தை தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் குழந்தையிடம் ஏற்பட்ட பாசத்தால் தினமும் உணவு கொண்டு வந்து தருவதாகவும் அதை மறுக்காமல் வாங்கி கொள்ள வெண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த குழந்தையும் சம்மதித்தது.
அந்தத் தாயும் குழந்தைக்குத் தினமும் உணவு கொண்டு வந்து தந்தார். அந்த குழந்தையும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளும். அவர்களுக்கிடையே தாய், மகன் பாசம் உண்டானது. அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி அந்த குழந்தையிடம் இருந்த தெய்வீக அருள் ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை “சாய்” என்று அழைத்தார்.
சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறி, ஊர் ஊராக அலைந்து திரிந்து அங்குள்ள கோவில்களில் வணங்கி வழிபட்டான். ஒருநாள் சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியை கண்டான். அந்தச் சிறுவனின் அருள் தன்மையைக் கண்டு வணங்கிய அவர் தமது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டார்.
சாய் எனும் அந்த சிறுவன் வியாபாரியின் மகள் திருமணத்திற்காக சீரடிக்கு மீண்டும் வந்தான். அப்போது சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது.
சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரம் தேடிச் சென்று அமர்ந்தான். கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்த சாய் மீண்டும் திரும்பி வந்திருப்பதை கண்டார். அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் அது பற்றி அவரிடமே கேட்டார்கள்.
அதற்கு அந்த அருள் மிகுந்த சிறுவன் இந்த வேப்பமரமே தனது குரு என்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் நெய் சிலிர்த்து போனார்கள். அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள்.
அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் பல நிகழ்த்தத் துவங்கினார். அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் சீரடி மக்கள் பாபா என்பதையும் சேர்த்து “சாய்பாபா” என்று அழைக்கத் துவங்கினார்கள். உலகை உய்விக்கவந்த பாபா இப்படி தான் மக்களிடையே உருவானார்.
சீரடி சாய்பாபா சீரடியில் அற்புதமான செயல்களைச் செய்து அனைவரையும் நேசிக்கவும் வைத்தார். இவரின் அற்புதங்கள் எல்லா ஊர்களிலும் பரவியது. அவரைத் தேடி பல ஊரிலிருந்தும் மக்கள் வரத் துவங்கினார்கள். அவரும் அனைவரது துயரங்களுக்கும் விடியலாக பல அற்புதங்களைச் செய்து மகிழ்ச்சியடையச் செய்தார்.
அவர் வேப்பமரத்தடியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். எனவே இரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலான ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளை நீக்கினார். இதனால் சாயிடம் இரு மதத்திலிருப்போரும் ஈடுபாடு கொண்டனர்.
அற்புதங்கள் பல செய்த சாய்பாபாவிற்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அவர் சாய்பாபா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். சாய்பாபா அவரிடம் தான் ஜீவசமாதி அடைவதற்காக வீடு ஒன்று கட்டித் தரும்படி கேட்க அப்படியே அவரும் வீடு கட்டித் தந்தார். சாய்பாபா அந்த வீட்டில் அப்துல் என்ற ஏழை பக்தரை தனக்கு உதவி செய்வதற்காக தன்னுடன் வைத்துக் கொண்டார். இறுதியில் அனைவருக்கும் அருள் செய்த அந்த மகாகுரு 1918 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார்.
இன்றும் ஏராளமான மக்கள் நம்பிக்கையோடு சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அடுத்து இந்த சீரடி சாய்பாபாவின் தலத்திற்கு வருபவர்கள் தான் அதிகம். சாய் நம்பும் பக்தரை காக்கும் தெய்வம். அவரின் பாதம் பணிவோம்.