எனது வலைப்பதிவு பட்டியல்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 10 மார்ச், 2015

சித்தர்களின் உடலுறவு சாஸ்திரம்


சித்தர்களின் உடலுறவு சாஸ்திரம்

பரத்வாஜர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு சாஸ்திரம்
விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.
4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...
================================================
1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

அலங்கார யோகா நரசிம்மார்



அலங்கார யோகா நரசிம்மார்



வியாழன், 26 பிப்ரவரி, 2015

குலதெய்வத்தை கண்டுபிடிக்க






நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. இந்தப்பதிவில் எளிமையான, அனுபவப்பூர்வமான முறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி வெற்றி கொள்க.

1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர்,ஒன்பது கோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.

2. சிவபெருமானுக்கு அவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசை செய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

3. " ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும், காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக" என்று மனமுருகி வேண்டிக்கொள்க.

4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், காளியம்மன், கருப்பர் கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.

5. உங்கள் ஊரில் ஊர்த்தெய்வமாக இருக்கும் (உதாரணம்: மதுரை- மீனாட்சி அம்மன், காஞ்சி- காமாட்சி, காரைக்குடி- முத்தாலம்மன், சென்னை- சென்னியம்மன், பட்டுக்கோட்டை- நாடியம்மன், திருச்சி- உறையூர் வெக்காளியம்மன்) தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.

6. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.

7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.

8. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.

9. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.

10. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்க வேண்டியது கட்டாயம்.

11. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.

12. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.

13. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக் கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும் காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.

14. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.

15. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில் நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.

ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

"தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்.

என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையை பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்க்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக"

ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

16, பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்தது வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

17. பூசையின் முதல் நாளன்றே உங்கள் குலதெய்வம் உங்களைத்தேடி வந்துவிடும். நம்பிக்கையோடு 48 நாட்கள் இதே பூசையை செய்யும்போது உங்கள் குலதெய்வம் எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும் வந்துவிடுவது உறுதி.

18. 7 தலைமுறையாக வராத குலதெய்வம் இந்தப்பூசையால் அவர்களை தேடி வந்தது. நம்பிக்கையோடு செய்யுங்கள். வெற்றி உண்டாகட்டும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மரகத லிங்கம்


ஓம்சி வா சிவா ஓம்!!!!! 

தஞ்சை மாவட்டம் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள மரகத லிங்கம்





ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

நடராஜர் கோயிலில் அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள்



சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள 

சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் 






நம் தில்லையம்பதி
சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.



பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1)
இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).


(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.


3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5)
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6)
திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.



(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,,,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9)
பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10)
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே
கூறிவிட்டது......


சனி, 20 செப்டம்பர், 2014

சாளக்கிராமம்

சாளக்கிராமம்



பண்டைய  இந்தியாவில்  தலை  சிறந்து  விளங்கிய  ”அவந்தி ”  தேசமே  இன்றைய   நேபாளம் .இங்கு  இமயமலையின் அடிவாரத்தை  ஒட்டினார்போல “ஹரிபர்வதம்”  என்னுமோர்  மலை  உள்ளது .இங்கு  சங்கர தீர்த்தம்  என்னும் பகுதியில்  ” கண்டகி ” நதி  உற்பத்தியாகின்றது . இந்தப்பகுதிதான்  ”சாளக்கிராமம்”‘  என்று  அழைக்கப்படுகிறது . இந்த  ” ஹரி ”  ஷேத்திரத்தில்  உள்ள  சகல  கற்களிலும்,  விஷ்ணுவின்  சகல அம்சங்களும் பொருந்திய  சாளக்கிராம மூர்த்திகள்  புண்ணியகாலங்களில்  தோன்றுவதாகக் கூறப்படுகிறது .

சாளக்கிராமம்:
சாளக்கிராமம்  என்பது  கண்டகி நதியில்  உற்பத்தியாகின்ற ஒருவகையான  அழகிய  தெய்வீகம்  நிறைந்த  கற்களாகும். இவைகள்  நத்தைக்கூடு ,  சங்கு ,  போன்ற
 பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும்  கிடைக்கின்றன .

மஹாவிஷ்ணு தாமாகவே  ,   தங்கமயமான  ஒளியுடன்  திகழும்  ” வஜ்ரகிரீடம் ”   என்ற  பூச்சியின்  வடிவம்  கொண்டு , கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து  ,  அதன்  கர்பத்தை  அடைந்து , அங்கு ,  ரீங்காரமான  சப்தத்தில் ,  இருந்து  கொண்டே தன்  முகத்தினால்  ,பலவிதமான  சுருள்  ரேகையுடன்  கூடிய  பல சக்கரங்களை  வரைந்து  ,  பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை– ( அதாவது  தனது  அவதார  ரூபங்களை )  பல வடிவங்களில்  விளையாட்டாகவே  வரைந்து வெகுகாலத்திற்கு  அங்கேயே  இருந்து  பின்  மறைந்து விடுவதாகக்  கூறப்படுகிறது.

இப்பேர்பட்ட  வடிவங்களே  நாம் சேவிப்பதற்கு  உகந்தவையாகும் .இவைகளில்  ஸ்ரீமந்  நாரயணின்  ஜீவருபம் கலந்து இருப்பதாக  ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப  அவற்றின்  பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம் 

சாளக்கிராமத்தில்  தெய்வீக  சக்தி  இருப்பது  மட்டுமின்றி ,  அவற்றில்  14  உலோகங்கள்
இருப்பதாகக்  கூறப்படுகிறது .சாளக்கிராமம்  விற்பனை   செய்வதை   வாங்குதல்   கூடாது .பிறரால்  பூஜிக்கப்பட்ட  சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் ,  சாஸ்த்திர  ஞானம் பெற்றவர்களிடமிருந்தும்   வாங்குதல்  நன்று .

1 . நீல  நிறம்—செல்வம் , சுகம் ( ஸ்ரீ  கிருஷ்ண  ஷேத்திரம் )
2 . பச்சை—பலம் , தைரியம்  ( ஸ்ரீ  நாரயண ஷேத்திரம் )
3 .வெண்மை—ஞானம் ,  பக்தி ,  மோட்சம் (வாசுதேவ  ஷேத்திரம் )
4  .கருப்பு—புகழ் , பெருமை ( விஷ்ணு  ஷேத்திரம் )
5 .புகை நிறம்—துக்கம் , தரித்திரம்
6 .மஞ்சள் நிறம்—  வாமன  ஷேத்திரம்
7 . பசும்பொன் ( அ ) மஞ்சள் கலந்த  சிகப்பு  நிறம்—ஸ்ரீ  நரசிம்ம  ஷேத்திரம்

சாளக்கிராமத்தை   பால்  ( அ )  அரிசியின்  மீது  வைத்திருந்து  பின்னர்   எடுத்துப் பார்த்தால் ,  அதன்  எடை  முன்பு இருந்ததை  விடக்  கூடுதலாக  இருக்கும் .

துண்டிக்கப்பட்டிருந்தாலும்  ( அ )  விரிந்து  போனதாய்  இருந்தாலும்

 சாளக்கிராமம்   எங்கு  இருக்கிறதோ  அங்கு  தோசமில்லை .

உடைந்திருந்தாலும்   அதில்   சக்கர  ரேகைகள் இருப்பின் ,  அது  மிகவும்  சிறப்பம்சமாகும் . நேபாளத்தில்  கடைத்தெருக்களில் சாளக்கிராமங்களைக் குவித்து  வைத்து  விற்கிறார்கள் .பெரியவர்களின்  ஆலோசனையின் பேரில்  வாங்குவது  சிறப்பு . இராமேஸ்வரம்  கோவிலிலிருந்து  வடக்கே 5 மைல்  தொலைவில்  உள்ள  ஆஞ்சனேயர்  கோவிலில்  தேங்காயளவு பருமனான  சாளக்கிராமம்  உள்ளது.  இராமேஸ்வரத்தில்  ஏற்பட்ட  ஒரு  புயலின்  போது  கிடைத்த  இந்த சாளக்கிராமத்தில்  நரசிம்ம  மூர்த்தியின்  திரு முகம்  ரேகை  வடிவில்  அமைந்துள்ளது .

 இராமேஸ்வரம்  செல்லும் அன்பர்கள்   கவனிக்க:
 நேபாளத்தின்  தலைநகரமான  காட்மாண்டுவிலிருந்து   சுமார்  65  மைல்  தொலைவில்  ”தாமோதர்  குண்டம் ” (5,400 மீ உயரத்தில் ) என்னும்   ஓர்  இடம்  உள்ளது .இந்தக்குளம்  10 (அ ) 12  வருடத்திற்கு   ஒருமுறை   பொங்கி ,  சாளக்கிராம  கற்களைக் கக்கும்   என்ற  கருத்தும்   நிலவுகிறது .

 இதுவும்   கண்டகி நதிக்கரையில்தான்அமைந்துள்ளது.சாளக்கிராமத்தின்  வயது  பல  கோடி   ஆண்டுகள்  என்பது  நிரூபணம்  செய்யப்பட்டுள்ளது .அறிவியல்  நோக்கில் ஆராய்ந்தால் ,  சாளக்கிராமங்கள்  ” அம்மோனைட் ”என்ற  வகையைச்சார்ந்த கற்படிவம்  ஆகும் . ஏறத்தாழ 7  கோடியிலிருந்து   20  கோடி  ஆண்டுகளுக்கு  முன்னர் ,  இடை  ஊழிக்காலத்தில்  ( MESOZOIC )   வாழ்ந்து பின்னர் அற்றுப்போய் விட்ட  (fossil stones ) ஒருவித   மெல்லுடலிகள்தான்  ( marine animals-sub-class—ammonoidea ,class–cephalopoda phylum—mollusca  –அடியேன்   விலங்கியல் வகுப்பு   மாணவியாக்கும் ) அம்மோனைட்டுகள்  ( அ ) அம்மோனாய்டுகள்  என்று   அழைக்கப்படுகின்றன .

இந்தியா ,நேபாள் உள்ளிட்ட  பல  நாடுகளிலும்   அம்மோனைட்  படிவங்கள்  கிடைக்கின்றன . ”பாற்கடலில்  பிறந்தாலும்  நத்தைதான்  சாளக்கிராமமோ ”  என்ற  முதுமொழி ,  சேது புராணம்  என்ற  பழைய  நூலில் மேற்கோளாக  எடுத்தாளப்பட்டுள்ளது . இதிலிருந்து  நத்தை  போன்ற  வேறோரு  உயிரின்  படிவமே  சாளக்கிராமம்  என்று  நம்  முன்னோர்கள்    !
அறிந்திருக்கின்றனர் . (  எதைத்தான்  அறியவில்லை அவர்கள் )

இயற்கையில் மிகத்தொன்மையான  அற்புதமான  இந்தச்  சிருஷ்டியில்  நம்  முன்னோர்கள்,   ”இறைத்தத்துவத்தைக் கண்டது நமது  மரபாகும் .  இன்றளவும்  கண்டகி  நதியில்  சாளக்கிராமங்கள்  ஏராளமாகஉற்பத்தியாகி  நேபாளத்து  வீதிகளில் விற்கப்படுவது  கண்கூடு .